Nghhpdhy; ghjpf;fg;gl;l rk;G+h; gpuNjr kf;fSf;F “Gjpa re;jh;g;gq;fs;” (NOW WOW) vd;w If;fpa mnkhpf;fhitr; Nrh;e;j jd;dhh;t njhz;L epWtdk; 3.26 kpy;ypad; ngWkjpahd tptrha Nkk;ghl;L tho;thjhu cjtpfis toq;fpAs;sJ.

Nghhpdhy; ghjpf;fg;gl;lth;fSf;F cjtpfs; toq;Fk; “Gjpa re;jh;g;gq;fs;” (NOW WOW) vd;w If;fpa mnkhpf;fhitr; Nrh;e;j jd;dhh;t njhz;L epWtdk; jpUNfhzkiy khtl;lk; %Jhh; gpuNjr nrayhsh; gphptpd; fl;ilgwpr;rhd; njw;F fpuhk Nritahsh; gphptpw;Fl;gl;l fl;ilgwpr;rhd;> re;jzntl;il> fNzrGuk;> mk;kd; efh,; mwghj; efh; Mfpa fpuhkq;fspy; cs;s Nghhpdhy; ghjpf;fg;gl;l 40 FLk;gq;fSf;F mth;fspd; tho;thjhuj;ij Nkk;gLj;Jfpd;w Nehf;fpy; tptrha cgfuzq;fis toq;fp mth;fspd; nghUshjhuj;ij Nkk;gLj;jp tUfpd;wJ.

kl;lf;fsg;gpy; cs;s cyf ez;gh;fspd; NjitfSf;fhd mikg;gpd; (WFN) Clhf nraw;gLj;jg;gLk; ,e;j tptrha Nkk;ghl;L tho;thjhu cjtpj;jpl;lj;jpw;F ,Jtiu 3>266>287.00 &gh (3.26 million) nrytplg;gl;Ls;sjhf WFN mikg;gpd; epiwNtw;Wg; gzpg;ghsh; jpU A.fq;fhjud; njhptpj;jhh;.

fle;j 2006 Mk; Mz;L ,lk;ngw;w Aj;j;jpdhy; %Jhh; gpuNjrj;jpd; rk;G+iu mz;ba gpuNjrq;fspy; ,Ue;J jkpo; kf;fs; ,lk; ngah;e;J gy tUlq;fshf kl;lf;fsg;gpy; trpj;J te;J kPz;Lk; kPs; FbNaw;wk; nra;ag;gl;l epiyapy; jq;fsJ guk;giuj; njhopyhd tptrhaj;ij Nkw;nfhs;tjw;F vJtpj cjtpfSk; mw;w epiyapy; gy Jd;gq;fSld; tho;e;j me;j kf;fSf;F vkJ epWtdj;jpd; Clhf toq;fg;gl;Ls;s ,e;j cjtpahdJ mth;fspd; tho;thjhuq;fis kPz;Lk; fl;bnaOg;Gtjw;F nghpJk; cWJizahf mike;Js;sij ,l;L jhk; nghpJk; kfpo;r;rp miltJld; ,jw;fhf cjtp toq;fpa Gjpa re;jh;g;gq;fs; (NOW WOW) vd;w mikg;gpw;Fk; mnkhpf;fh tho; jkpo; kf;fSf;Fk; ,yq;if tho; jkpo; kf;fspd; rhh;ghfTk; vkJ epWtdj;jpd; rhh;ghftk; kdk; epiwe;j ed;wpfisj; njhptpj;Jf;nfhs;tJld; vjph;fhyj;jpy; ,d;Dk; gy EhW ghjpf;fg;gl;l kf;fSf;F ,e;j epWtdk; cjtpfis toq;fp jhafj;jpy; tho;fpd;w vkJ kf;fspd; tho;tpy; xspkakhd vjph;fhyj;ij Vw;gLj;j Ntz;Lk; vdTk; jpU fq;fhjud; NkYk; njhptpj;jhh;.



சமூக பொருளாதார அபிவிருத்திக்கான புதிய திட்டம் அறிமுகம்.

இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நிரந்தர சமாதானத்தையும் கட்டியெழுப்புவதற்காகவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் விசேடமாக மேற்குறித்த மாகாணங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துகின்ற நோக்கிலும் 3500 மில்லியன் இலங்கை ரூபா செலவில் பல வேலைத் திட்டங்களை 2020ம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு எமது நிறுவனம் தீர்மானித்துள்ளதால் குறித்த திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலகில் உள்ள நன்கொடையாளர்களிடம் இருந்து நிதியுதவியினை எதிர்பார்க்கின்றோம். நன்கொடைகள் வழங்குவதற்கு விரும்புவோர் கீழேயுள்ள வழிமுறைகளினூடாக நிதியினை அனுப்பலாம்.



சமூக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதற்காக முல்லைத்தீவில் மாட்டுப் பண்ணை.4>

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு (WFN) ஐக்கிய அமெரிக்காவின் புதிய சந்தர்ப்பங்கள் (என்ற தொண்டு நிறுவனத்தின் 12 மில்லியன் இலங்கை ரூபா நிதி உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புதல் என்ற வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவிபுரம் என்ற இடத்தில் மாட்டுப் பண்ணை ஒன்று அமைக்கப்படுகின்றது. முதல் கட்டமாக 40 பயனாளிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த வாழ்வாதார உதவித்திட்டத்தில் பயனாளிகளாக உள்ள அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் அனேகமானோர் அவயங்களை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



சமூக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சிநெறி

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி பயிற்சிநெறி ஒன்று உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிநெறி தற்போது மட்டக்களப்பில் உள்ள எமது நிறுவனத்தின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது இந்த பயிற்சி நெறியில் ஊனமுற்றோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள ஊனமுற்ற பெண்களும் யுத்தத்தினால் கணவனை இழந்த விதவைகளும் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சிநெறியினை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை செங்கலடி மண்முனை மேற்கு வவுணதீவு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை வெல்லாவெளி மண்முனைப்பற்று ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பயிற்சிநெறி நடைமுறைப்படுத்தப்படும். ஏனை 7 மாவட்டங்களிலும் எந்தெந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் பயிற்சிநெறி நடாத்தப்பட வேண்டி உள்ளதென இனங்காணப்பட்டு அங்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் உடனடியாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இத்திட்டத்தின் மூலமாக வெறுமனே பயிற்சிநெறியினை மட்டும் வழங்காது பயிற்சிபெற்று வெளியேறும் பெண்கள் உடனடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் அவர்களினால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை உரியமுறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்குமான அனைத்து ஏற்பாடுகளையும் எமது நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பன்புல் மற்றும் பனை ஓலை என்பவற்றினை முலப்பொருளாகக் கொண்டு எவ்வாறான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்தால் சந்தைப்படுத்துவதற்கும் அதிக இலாபம் பெறுவதற்கும் வழிகோலும் என்பதற்கிணங்க ஒரு சில கைவினைப் பொருட்கள் இனங்காணப்பட்டு அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான குறுகியகால பயிற்சியே தற்போது வழங்கப்பட இருக்கின்றன. உலகில் எவ்வகையான கைவினைப் பொருட்களுக்காக அவ்வப்போது உருவாகும் கேள்வியினையும் அவற்றிக்கான சந்தைப்படுத்தல் வசதியையும் கருத்தில்கொண்டு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பயிற்சிகள் இனங்காணப்பட்டு அப்பயிற்சிகளை குறித்த பயிற்சியாளர்களுக்கு வழங்குவதற்கும் எமது நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 25 பயிற்சியாளர்களுக்கு 4 வாரப்பயிற்சி வழங்குவதற்காக இலங்கை ரூபா 250,000.00 தேவையாக உள்ளது. பயிற்சியாளர்கள் பயிற்சியினை பெற்று வெளியேறியவுடன் உடனடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கான சகல வழிவகைகளையும் எமது நிறுவனம் மேற்கொண்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் ஒரு பெண் ஒரு நாளைக்கு குறைந்தது 500.00 ரூபா ஊதியமாகப் பெறும் வகையிலேயே குறித்த கைவினைப் பொருளுக்கான உற்பத்திக்கூலி தீர்மானிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளாக உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் வசிக்கின்ற எமது உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் என நினைக்கும் புலம்பெயர் உறவுகள் இந்தத் திட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவி புரியலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நன்கொடைகளாக பணங்களை வழங்குவதால் எவ்வித பயனையும் அவர்கள் அடையமாட்டார்கள். மாறாக இவ்வாறான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய வருமானங்களை தாங்களாகவே தேடிக்கொள்ளும் வாய்ப்பு இங்கு உருவாகின்றது. அத்துடன் எதுவித வாழ்வாதார வழிவகைகளுமற்ற நிலையில் சமுதாய சீர்கேடுகளில் ஈடுபடும் யுத்தத்தினால் விதவைகளான இளம் பெண்களை இப்பயிற்சித் திட்டத்தில் உள்வாங்கி தொழில் வளங்குவதால் எமது சமுதாய பண்பாடுகள் சீரழிந்து போகாமல் பாதுகாக்கலாம். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு லோட்டஸ் குறூப் (லண்டன்) நிதி உதவி வழங்கியுள்ளது. ஆனால் பூரணமாக இத்திட்டத்தை சகல பகுதிகளிலும் செயற்படுத்துவதற்கு தேவையான நிதி உதவிகளை நன்கொடையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து இந்தத் திட்டத்திற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.



யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இரண்டாவது கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தினை WFN நிறுவனம் மட் பட்டிப்பளை பிரதேசத்தில் 18.07.2013 இல் திறந்தது

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கைவினைப் பொருட்கள் உற்பத்தித் திட்டம் மட் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 18.07.2013 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தினை மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் திருமதி வில்வரெட்ணம் பைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் தலமைப் பணிப்பாளர் திரு.ஏ.கங்காதரன் சந்தைப் படுத்தல் பிரிவின் முகாமையாளர் மனோகரி மற்றும் அமைப்பின் உத்தியோகத்தர்கள் அத்துடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சமூகசேவை உத்தியோகத்தர் கமல்ராஜ் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.